டெல்லி

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எனபது தவாறானது என காங்கிரஸ் எம் பி மனீஷ் திவாரி கூறி உள்ளார்.

நேற்று காங்கிரஸ் எம் பி மனீஷ் திவாரி செய்தியாளர்களிடம்,

“இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது தவறான வார்த்தை. ஏன் என்றால் இது போர் இல்லை. பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதில் பாகிஸ்தான் ஈடுபட்டதால் இதற்கு இந்திய தண்டனை கொடுத்தது. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் ஊக்குவிப்பை அவர்கள் நிறுத்த வேண்டும்..

காஷ்மீர் விவகாரம் ஆயிரம் ஆண்டு கால மோதல் இல்லை. அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள எவரேனும் சிலர், அவர்களுடைய அதிபர் டிரம்புக்கு கல்வியறிவு ஊட்ட வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. 78 ஆண்டுகளுக்கு முன் 1947-ம் ஆண்டு அக்டோபர் 22-ல் சுதந்திர காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுத்துள்ளது.

அதன் பின், அக்டோபர் 26-ல் மகாராஜா ஹரி சிங்கால் முழு அளவில் இந்தியாவிடம் விட்டு கொடுக்கப்பட்டது. அதில், பாகிஸ்தான் தற்போது சட்டவிரோத வகையில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் பகுதிகளும் அடங்கும். இந்த எளிமையான உண்மையை புரிந்து கொள்வதில் என்ன கடினம்?.

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீட்டை மீண்டும் நிராகரித்து உள்ள இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதி, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தெளிவாக கூறியுள்ளது”

என்று தெரிவித்துள்ளார்.,`