டெல்லி
இன்றூ இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியதுடன் இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது.
அனைத்தையும்இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததால் பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதையொட்டி நடந்த பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
அயினும் சில மணி நேரத்திலேயே பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி தக்கியதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பி. மின்வினியோகமும் வழங்கப்பட்டது.
இங்கு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெற்றது. ஆயினும் எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது. தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையே இன்று (திங்கட்கிழமை) பகல் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.