ஸ்ரீ பாம்பலம்மன் திருக்கோயில், லட்சுமணம்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், கரூர் மாவட்டம்

தல சிறப்பு :

இத்தலத்தில் ஸ்ரீ பாம்பலம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறாள். இங்கு அம்மன் சிலை கிடையாது. புற்றே சிலை. அம்மனுக்கு மேற்கூரை கிடையாது. மேலும் கொடிய விஷமுடைய மனிதர்களைத் தீண்டிவிட்டால் கோவிலில் வந்து பத்தினி(வேப்பம் இலை அரைத்தது) சாப்பிட்டால் விஷம் முறிந்து குணமடைகின்றனர். குழந்தை இல்லாதோர் பிரார்த்தனையாக வேண்டிகொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். ஸ்ரீ பாம்பலம்மன் விரும்பும் பிரார்த்தனை புராண நாடகம் என்பது கூறப்படுகிறது.

பொது தகவல் :

அருள்மிகு ஸ்ரீ பாம்பலம்மன் திருக்கோயில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கிருஷ்ணராயபுரத்தில்(சித்தலவாய்) இருந்து 9 கி.மீ தொலைவில் லட்சுமணம்பட்டி-யில் அமைந்துள்ளது வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறு போன்ற நாட்கள் விசேடமாக இருக்கும்.

தலபெருமை :

கொடிய விஷமுடைய மனிதர்களைத் தீண்டிவிட்டால் கோவிலில் வந்து பத்தினி(வேப்பம் இலை அரைத்தது) சாப்பிட்டால் விஷம் முறிந்து (குணமடைகின்றனர். குணமாகாத நோய்களுக்காக கோவிலிலே இருந்து பத்தியம் கடைபிடித்தால் நோய் நீங்கி குணமடைகின்றனர். குழந்தை இல்லாதோர் பிரார்த்தனையாக வேண்டிகொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

திருவிழா :

திருவிழா இரண்டாண்டுக்கு ஒரு முறை வைகாசி மாதத்தின் தொடக்க நாட்களில் மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழாவின் ஏழு நாட்களுக்கு முன்னதாகவே பால் குட விழா காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சமர்ப்பிக்கப்படும். அன்றிலிருந்தே திருவிழா தொடங்கப்பட்டு விட்டதாகக் கொள்ளலாம். அந்த நாளிலிருந்தே அருகில் உள்ள ஊர்களின் கோவில்களில் இருந்து மேள வாத்தியங்களுடன் “பூத்தட்டு” மூலம் பூக்கள் அம்மனுக்கு சமர்ப்பிக்கப்படும். இந்த நிகழ்வு ஏழு நாட்களுக்கும் இருக்கும் என்பதே சிறப்பு. திருவிழா முடிந்தும் இரண்டு மாதங்களுக்கு “புராண நாடகம்(தெருக்கூத்து)” பக்தர்களின் பிரார்த்தனையாக நடைபெறும். இதன் மூலம் தமிழக காலச்சாரமும் வரலாறும் பாமர மக்களையும் எளிதாக சென்றடைகிறது. திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக மெல்லிசைக் கச்சேரி நிறைவு செய்கிறது. தோரயமாக மூன்று மாதங்கள் திருவிழா நடைபெறுகிறது.

பிரார்த்தனை :

புராண நாடகம் நடத்துதல்.

நேர்த்திக்கடன் :

அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், மா விளக்கு போடுதல், அங்கம் புரண்டு வருதல்.