
கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கான கருவிகளுடன் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் ஆகாய கப்பலை, டிஆர்டிஓ (மே 3ந்தேதி) வெற்றிகரமாக சோதனை செய்தது. இது வானில் 17 கி.மீ உயரம் வரை பறந்து, சோதனை வெற்றி அடைந்துள்ளது.
இந்திய கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ஆகாய கப்பல் பரிசோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக மேற்கொண்டது. புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கான கருவிகளுடன், வானில் மிக உயரத்தில் பறக்கும் ஆகாய கப்பல் தொழில்நுட்பம் உலகில் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் அதேபோன்ற ஆகாய கப்பலை ஆக்ராவை சேர்ந்த ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ஏடிஆர்டி) உருவாக்கியது.

இந்த ஆகாய கப்பல் சோதனை மே 3ந்தேதி நடத்தப்பட்டது. முன்னதாக இந்த ஏர்ஷிப்பில், கண்காணிப்பு கருவி உள்பட பல்வேறு ஆய்வுகளுக்கான இயந்திரங்கள் பொருத்தப் பட்டன. இதையடுத்து ஏர்ஷிப் சோதனை நடத்தப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷியாபூரில் இந்த ஆகாய கப்பல் (ஏர்ஷிப்) பறக்கவிட்டு டிஆர்டிஓ பரிசோதனை செய்தது. மொத்தம் 62 நிமிடங்கள் இந்த ஆகாய கப்பல் பறந்தது. அப்போது பரிசோதனை குழுவினர் ஆகாய கப்பலின் அழுத்தம், அவசரமாக தரையிறக்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.

ஸ்ட்ராடோஸ்பியர் கண்காணிப்பு ஏர்ஷிப், வான்வழி டெலிவரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆக்ரா, அடுக்கு மண்டலத்தில் தோராயமாக 17 கிமீ உயரத்தில் பறக்கும் உயரத்தை அடைந்தது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஷெரோபூர் சோதனை தளத்தில் நடந்த இந்த சோதனை 62 நிமிடங்கள் நீடித்தது. விமானத்தின் போது உள் சென்சார்கள் முக்கியமான தரவை அனுப்பின, இது எதிர்கால உயரமான ஏர்ஷிப் சிமுலேஷன் மாதிரிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
இந்த ஆகாய கப்பல் மாதிரியின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது மிக முக்கிய சாதனை என டிஆர்டிஓ தலைவர் சமிர் வி.காமத் தெரிவித்தார்.
ஆகாய கப்பல் கண்காணிப்பு கருவி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதற்காக டிஆர்டிஓ குழுவினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
ஆகாய கப்பல் கண்காணிப்பு கருவி மூலம் நாட்டின் புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில் உளவுப் பணிக்கான இந்த ஆகாய கப்பல் கண்காணிப்பு கருவி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.