பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் பீர் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிரியர்கள் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே கர்நாடகத்தில் மதுபான விலை குறிப்பாக பீர் விலை 2, 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் அவற்றின் விலையை உயர்த்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பீர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரியில் பீர் விலை உயா்த்தப்பட்ட நிலையில் 2 மாதங்களில் மீண்டும் அவற்றின் விலை அதிகரிக்கப்பட இருக்கிறது. தற்போது 195 சதவீதமாக உள்ள  பீர் மீதான கலால் வரியை 205 சதவீதமாக உயர்த்த கலால் துறை முடிவு செய்துள்ளதால் பீர் விலை பாட்டிலுக்கு ரூ.10 உயரும் என தகவல் வெளியாகி இருகிறது. எனவே மதுப்பிரியர்கள் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

மாநில அரசு தனது வருவாயை அதிகரித்துக்கொள்ள நினைத்தால் மதுபான விலையை உயர்த்தி விடுகிறது என்று மதுப்பிரியர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.  விரைவில் இந்த விலை உயர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.