டெல்லி
மத்திய அமைச்சரவை ரூ 355க்கு குவிண்டால் கரும்பு ஆதார விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்று நடந்த பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்வை குழு கூட்டத்தில், 2025-2026 ஆம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
அதன்படி கரும்பு குவிண்டாலுக்கு ரூ.355 வீதம் 10.25 சதவீத அடிப்படை மீட்பு விகிதத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 10.25 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள ஒவ்வொரு 0.1 சதவீதத்துக்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை கிடைக்கும். அத்துடன் குறைவாக உள்ள மீட்பில் ஒவ்வொரு 0.1 சதவீதத்துக்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை குறைக்கப்படும்.
மத்திய அரசு கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் 9.5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு எந்தவித விலக்கும் அளிக்கப்படுவதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளதால் அத்தகைய விவசாயிகளுக்கு வரும் 2025-2026-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.329.05 கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.