டெல்லி; பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, மத்தியஅரசு, பாகிஸ்தான்மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற மறுத்து வருகிறது. மேலும் எல்லை பகுதியில் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், ராணுவ துருப்புகளையும் குவித்து வருகிறது.
இதனால் கடுப்பான பாகிஸ்தான், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வானவெளியை பயன்படுத்த தடை விதித்ததுடன், தங்களிடம் அனு குண்டுகள் இருப்பதாக மிரட்டி வருகிறது.
இந்த நிலையில், , பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. புதிய நடவடிக்கையாக பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வழியை மூடியது. பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்களுக்கும், பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் இயக்கப்படும், சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களுக்கும் இந்திய வான்வெளி கிடைக்காது.
இந்தத் தடை பாகிஸ்தான் ராணுவ விமானங்களுக்கும் பொருந்தும். இந்தியா, பாகிஸ்தான் இடையே நேரடி விமானங்கள் இல்லை. சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமானங்களுக்கு பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Pahalgam attack India pakistan army plane Indian airspace பஹல்காம் தாக்குதல் இந்தியா பாகிஸ்தான்