டெல்லி

ன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடத்திய கோர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இரு ந்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, கடந்த 23-ந்தேதி நடந்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு, எல்லை மூடல், சிந்துநதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு என பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இன்று முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.