2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் உள்ளிட்ட மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தலில் விபரல் கட்சியின் சார்பில் மூவரும், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் இருவரும், பசுமை கட்சியின் சார்பில் ஒருவரும் என மொத்தம் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

அனிதா ஆனந்த்

இவர்களில் விபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் Oakville கிழக்கு தொகுதியிலும், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி, Pickering–Brooklin தொகுதியில் ஜுனிதா நாதன் ஆகிய மூன்று தமிழர்கள் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

ஜுனிதா நாதன் – ஹரி ஆனந்தசங்கரி

கனடா நாட்டின் நோவா ஸ்கோடியாவின் கென்ட்வில்லில் பிறந்தவரான அனிதா ஆனந்த் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பதும் மறைந்த இவரது தந்தை தமிழ்நாட்டின் கோவையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் மறைந்த இவரது தாய் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.