டெல்லி

மலாக்கத்துறை ஆதாரம் இல்லாததால் காமன்வெல்த் ஊழல் வழக்கை மூடியதால் மோடி  மன்னிப்பு  கேட்க வேண்டும் என காக்கிரஸ் வலியுறுத்தி உள்ளது/

கடண்த 2010 இல் இந்தியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துஅரசியல் களத்திலும் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.  இந்த போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து 13 ஆண்டுகள் விசாரணை நடத்திய வந்தது

சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் பண முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விசாரணையின்போது கண்டறியப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்த அமலாக்கத் துறை வழக்கை முடித்து வைக்கும்படி டெல்லி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

நேற்று  இந்த அறிக்கையை ஏற்று நீதிபதி சஞ்சீவ் அகா்வால் நேற்று இந்த வழக்கை முடித்து வைத்து சுரேஷ் கல்மாடி விடுதலை உத்தரவும் பிறப்பித்தார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இது குற்த்து எக்ஸ் தளத்தில்,

“காங்கிரசை இழிவுபடுத்த 2ஜி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போன்ற ஊழல்களைப் பிரதமர் மோடியும், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஜோடித்தனா்.

2ஜி வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உண்மை வெளிவந்துவிட்டது.2ஜி வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உண்மை வெளிவந்துவிட்டது.

தற்போது காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டு வழக்கை முடித்து வைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தியதற்கு மோடியும், கேஜ்ரிவாலும் மன்னிப்பு கேட்க வேண்டும்”

என்று பதிவிட்டுள்ளார்.