சென்னை
கவிஞர் பாரதிதாசனின் 135 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்க முதல்வர் மு க ஸ்டாலின் அவரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

இன்று கவிஞர் பாரதிதாசனின் 135-வது பிறந்த நாள் தமிழகம் எங்கும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.
அவ்வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,
”வேழத்தின் வலிமையோடு – திகட்டாத தீந்தமிழின் சுவையில், மடமைகளைச் சுட்டெரித்து, இருண்ட வீட்டில் குடும்ப விளக்கேற்றிய இசையமுது பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக!
இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் இணையரை வாழ்த்தும் போதெல்லாம், பாவேந்தர் எடுத்துச் சொல்லியபடி, வீட்டுக்கு விளக்காக – நாட்டுக்குத் தொண்டர்களாக வாழ்ந்திட வேண்டும் என்பதையே அறிவுரையாக வழங்குகிறேன்.
குன்றிலிட்ட விளக்காகத் தமிழ்ச்சமுதாயத்துக்கு ஒளி கொடுக்கும் பாவேந்தர் பாரதிதாசன் யாத்த வரிகளைத் தமிழர் நெஞ்சங்களில் ஏந்திப் பயணித்திடுவோம்’”
எனப் பதிவிட்டுள்ளார்.