சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2200 ரூபாய் உயர்ந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தங்கத்தின் விலை தொடர்ந்து விண்ணை நோக்கி உயர உயர பறந்து செல்வது சாமானிய மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2025ம் ஆண்டு பிறந்தது முதல் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மாதம் தொடங்கியது முதல் விர்ரென்று விண்ணை நோக்கி தக்கத்தின் விலை சென்றுகொண்டிருகிறது.

நேற்று (ஏப்ரல் 21)  22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ரூ.72,120-க்கு விற்பனையானது. . அதேபோல, வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.  இதன் காரணமாக  பொதுமக்கள்,  சாதாரணமாக ஒரு சரவரனுக்கு ஏதாவது ஒரு நகை வாங்க வேண்டுமென்றால், அதற்காக செய்கூலி சேதாம், ஜிஎஸ்டி என ஒருவர் சவரனுக்கு ரூ.80ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.2000 உயர்ந்து மக்களை மயக்கம் அடைய செய்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக சரவன் தங்கம் விலை ரூ.  ரூ. 74 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 22) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,200 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 9,015-க்கும், சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 72,120-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 275 உயர்ந்து ரூ. 9,290-க்கும் சவரனுக்கு ரூ. 2,200-க்கு உயர்ந்து ரூ. 74,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், விரைவில் தங்கம் விலை கிராம் ரூ. 10 ஆயிரத்தை தொடும் என நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.  வெள்ளி விலையில் மாற்றமில்லை! வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ. 111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,11,000-க்கும் விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வு நகை வியாபாரிகளை செல்வந்தராக மாற்றி வரும் நிலையில், சாமானிய மக்களை ஏழையாக உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பாவி மக்கள் மத்தியஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.