சென்னை: கடந்த இரு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் ஆஜரானார். 2ஆண்டு தலைமறைவாக இருந்த நபருக்கு அமர்வு நீதிமன்றம் உடனடியாக ஜாமின் வழங்கியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பினாமியாக செயல்பட்ட அசோக் குமார் தலைமறைவானார். அவரை கைது செய்ய அமலாக்கத்துறை தேடி வந்த நிலையில், அவரை இதுவரை பிடிக்க முடியவில்லை. அமலாக்கத்துறையின் தேடுதல் வேட்டைக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க மறுத்து வந்தால், செந்தில் பாலாஜி மீதான கேசும் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
அசோக்குமார் தொடர்பாக அமலாக்கத்துறை பல முறை அவருடைய உதவியாளர்களுக்கு மற்றும் அவரது உறவினர்கள் வீடு என பல இடங்களில் சோதனை நடத்திய நிலையில், வழக்கை விசாரித்து வரும் அமர்வு நீதிமன்றம், அசோக்குமார் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பியது.
ஏற்கனவே 4 முறை சம்மன் அனுப்பியும், அசோக்குமார் ஆஜராகாத நிலையில், அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது கொலை செய்யப்பட்டரா அல்லது வெளிநாடு தம்பிவிட்டாரா என்ற விவரமும் தெரிய வில்லை என கூறப்பட்டது.

இந்த கடந்த மார்ச் மாதம் 25ந்தேதி அன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அமலாக்கத் துறை வழக்கில் ஏப்ரல் 9ம் தேதி நேரில் ஆஜராகும்படி செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இன்று நீதிமன்றத்தில் திடீரென ஆஜரானார். இது வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
அசோக்குமார் மூத்த வழக்கறிஞர் ஒருவரின் பாதுகாப்புடன் வந்து நீதிமன்றத்தில் ஆஜனார்.
நீதிமன்றத்தில், இன்று (ஏப்ரல் 09) அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 2025ம் ஆண்டு ஜனவரியில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அசோக்குமார் உள்ளிட்டோர் ஏப்.9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஏப்.9) தமது வக்கீலுடன் ஆஜரானார். அப்போது, ‘செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன’ என அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து, ‘ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்துள்ளனர்’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, ‘ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்தனர் என்கிற தரவுகளை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும்’ என அமலாக்கத்துறை தெரிவித்தது. பின்னர் ‘ குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஏப்ரல் 20ம் தேதி ஜாமின் உத்தரவாத தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பங்களா வீட்டில் வருமான வரித்துறை சோதனை…
அமலாக்கத்துறை மீண்டும் செந்தில் பாலாஜியின் வீட்டில் நடத்திய சோதனையின் காரணம்