சென்னை

ரும் 17 ஆம் தேதி தமிழக சபாநாயகர் மீதான அதிமுகவின் நம்ம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது/

ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு மீது எதிர்கட்சியான அதிமுக வே சட்டசபை செயலாளர் சீனிவாசனை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்து இருந்தது. அதிமுகவின் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்வப்பட்டது.

இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு.

”அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை, பேசுவதை தொலைகாட்சியில் காட்டவில்லை என நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டு வந்துள்ளனர். இதற்கு ஏற்கனவே பதில் அளித்து உள்ளோம்.

யார் பேசுவதையும் காட்ட கூடாது என குறுகிய எண்ணத்துடன் இந்த அரசு செயல்படவில்லை. கடந்த முறை டெக்னிக்கல் பிரச்சினை என சட்டமன்றத்தில் பதில் அளித்து உள்ளேன். நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக 17-ம் தேதி (திங்கள்கிழமை) பேரவையில் எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபையில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடக்கும்போது சபாநாயகர் அப்பாவு அவரது இருக்கையில் இருக்கமாட்டார். மாறாக துணை சபாநாயகரோ, மாற்று தலைவர்களோ சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்துவார்கள் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்படும்.