சென்னை
சென்னை திருமங்கலம் பகுதிய்ல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.
சென்னையில் உள்ள திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் பாலமுருகனின் மனைவி சுமதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 19 வயதில் ஜஸ்வந்த் குமார் மற்றும் 17 வயதில் லிங்கேஷ் குமார் என்று இரு மகன்கள் உள்ள்னர்.
மருத்துவர் பாலமுருகனுக்கு ரூ.5 கோடி அளவிற்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி அவரட் ஹு குடும்பத்தினர் 4 பேரும் அவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
திருமங்கலம் போலீசார் இது குறிட்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது