டெல்லி:  குடியரசு துணைத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜக்தீப் தன்கர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை குறித்து  பிரதமர் மோடி நேரில் சென்று விசாரித்தார்,

திடீர் நெஞ்சுவலி காரணமாக, துணை குடியரசு தலைவரும், நாடாளுமன்ற மேலவை தலைவருமான ஜக்தீப் தன்கர்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தேகவல் அறிந்த பிரதமர் மோடி உடனடியாக எய்ம்ஸ்க்கு  நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தன்கரின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம்  அவர் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெஞ்சு வலி காரணமாக ஜக்தீப் தன்கர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்  தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஜக்தீப் தங்கரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்  தெரிவித்துள்ளது.