சென்னை: தொகுதி மறுசீரமைப்பு – மும்மொழி கொள்கைக்கு எதிராக வரும் 12ந்தேதி தமிழ்நாடு முழவதும் திமுக கண்டன பொதுக்கூட்டங்கள் அறிவித்து உள்ளது. திருவள்ளுரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வரும் மார்ச் 12 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக, “தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்” என்ற தலைப்பில் மத்திய அரசுக்கு எதிராக திமுக சார்பில் கண்டன பொதுகூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் வரும் மார்ச் 12 ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.
குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு,
திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்களின் பட்டியலையும் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தென் மாநில எம்.பிக்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது. எம்பி-க்கள் கூட்டு நடவடிக்கை குழு குறித்து மார்ச் 22ல் ஆலோசனை நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின், தென் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.