சென்னை: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய முன்னாள் கவர்னர் தமிழிசை  சவுந்தரராஜனை  சென்னை மாநகர காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே திமுக தரப்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டபோது, விதிகளை மீறி, பள்ளிகளுக்குள் சென்று, மாணவ மாணவிகளிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டபோது நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசும், காவல்துறையும், தற்போது எதிர்க்கட்சியான பாஜக அதுபோன்று கையெழுத்து இயக்கம் நடத்தும்போது அவரை கைது செய்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கிய பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கைது செய்யப்பட்டார்.

தமிழக பா.ஜ., சார்பில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற கையெழுத்து இயக்கம் துவக்க நிகழ்ச்சி, சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது. இதை, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், இணையதளம் வாயிலாக ஆதரவு தெரிவிக்க, ‘புதிய கல்வி’ என்ற இணையதளத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்நிலையில், இன்று (மார்ச் 06) சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கிய பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கைது செய்யப்பட்டார்.

அப்போது போலீசாருக்கும் பா.ஜ.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அனுமதி பெறாமல் கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளதாக போலீசார் குற்றம் சாட்டி யுள்ளனர். போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த போது தமிழிசை கூறியதாவது: சாமானிய மக்களிடமே கையெழுத்து வாங்குகிறோம். இதற்கு போலீசார் ஒத்துழைக்க வேண்டும். என்னை ஏன் தீவிரவாதி போல போலீசார் சுற்றி உள்ளனர் என்பது எனக்கு புரியவில்லை, என்றார்.

கையெழுத்து இயக்கத்திற்கு காவல்துறை அனுமதி பெறவில்லை என  போலீசார் அவரை கைது செய்த நிலையில்,  போலீசாரை கண்டித்து பாஜகவினர் கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.  போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கையெழுத்து இயக்கம் நடத்த காவல்துறை அறிவுறுத்திய நிலையில், காவல்துறை  அனுமதி பெற்று தான் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது என காவல் துறையிடம் தமிழிசை வாக்குவாதம் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக,  மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு மக்களிடம் ஆதரவு திரட்டும் பொருட்டு 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கத்தை  தமிழ்நாடு பாஜக மார்ச் 5ந்தேதி மாலை தொடங்கியுள்ளது. சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் கையெழுத்து இயக்கத்துடன் ‘சமக்கல்வி – எங்கள் உரிமை’ என்கிற இணையத்தளத்தையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் H ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், பொன் இராதாகிருஸ்ணன், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், நம் குழந்தைகள் அனைவருக்கும், ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வற்ற, தரமான கல்வி, சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தமிழக பாஜக  சார்பாகத் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்குகொண்டு, http://puthiyakalvi.in என்ற இணையதள இணைப்பில் கையெழுத்திட்டு, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கு, உங்கள் பெருவாரியான ஆதரவை வழங்குமாறு, தமிழக மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

‘நீட்’க்கு எதிராக போராடுங்கள்: அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய திமுக எம்எல்ஏ…