சென்னை: மறைந்த பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு இன்று பதவி ஏற்றநாளை சுட்டிக்காட்டி,  “அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது” எஎன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளை சுட்டிக்காட்டி, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,  “அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!

தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்!

என பதிவிட்டுள்ளார்.