சென்னை
இன்று முதல் தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“தூத்துக்குடி ரயில் நிலைய பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக ரயில்வே தண்டவாளத்தை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி இடையேயான ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு இரவு 9.05 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56724) இன்று (வியாழக்கிழமை) முதல் 4.4.25 வரையும், தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56725)இன்று முதல் 4.4.25 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதே போன்று வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 3 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56726) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 5.4.25 வரையும், தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சிக்கு காலை 8.30 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56723) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 5.4.25 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.”
என அறிவிக்கப்பட்டுள்ளது.