லக்னோ
மகாகும்பமேளாவில் ஒரு படகோட்டி ரூ. 30 கோடி சம்பாதித்துள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரை நடந்தது/ இந்த மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு ஆனால், 65 கோடிக்கும் கூடுதலான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடியுள்ளனர்.
உத்தர பிரதேச சட்டசபையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்,
”படகோட்டி ஒருவரின் குடும்பத்துக்கு 130 படகுகள் இருந்தன. அவற்றின் உதவியுடன் அந்த படகோட்டி, ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். அப்படியென்றால், 45 நாட்களில் ஒவ்வொரு படகும் ரூ.23 லட்சம் அவருக்கு வருவாய் ஈட்டி தந்தது. நாளொன்றுக்கு ஒரு படகிற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.52 ஆயிரம் வரை வருவாய் கிடைத்துள்ளது””
எனக் கூறியுள்ளார்.
அப்போது யோகிஉத்தர பிரதேச சட்டசபையில், 2025-26 ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளார். இது அவருடைய அரசின் கீழ் தாக்கல் செய்யப்படும் 9-வது பொது பட்ஜெட்டாகும்.