மும்பை
மும்பை உயர்நீதிமன்றம் செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது.

கடந்த 1994 ம் ஆண்டு நடந்த பங்குப் பட்டியல் மோசடியில், இந்தியப் பங்குச் சந்தை வாரியத்தின் (SEBI) முன்னாள் தலைவர் மாதபி பூரி புச், அதன் தற்போதைய முழுநேர இயக்குநர்கள் மூன்று பேர் மற்றும் இரண்டு பி.எஸ்.இ அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பணியகத்திற்கு (ACB) மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் பங்குச் சந்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், தவறு நடந்திருப்பது முதல்கட்ட ஆதாரங்களில் தெளிவாகிறது என்பதால், மாதபி பூரி புச் மற்றும் 5 அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு அமைப்பு (ACB) எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் அதனை நிறுத்தி வைத்துள்ளது.
அதாவது நேற்று பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.