சென்னை – பெங்களூரு இடையே புதிதாக போடப்பட்டுள்ள விரைவுச் சாலையில் குப்பனஹள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மோசமான சாலை விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இன்னோவா கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதியதில் காரில் இருந்த மகேஷ் (45), உத்விதா (2), ரத்னம்மா (60) தவிர பைக்கில் வந்த நபரும் விபத்தில் உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விரைவுச் சாலைப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்து, போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
பெங்களூரில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு காரில் திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தைத் தவிர்க்க முயன்றபோது கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பங்கார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.