கோவை
மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 25 ஆம் தேதி தமிழ்கம் வருகிறார்

வரும் 25 ஆம் தெதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற இருக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகை தர இருக்கிறார்.
கோவை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் வரும் அமித்ஷா 26ம் தேதி கோவையில் இருந்தபடி து காணொளி காட்சி மூலமாக ராமநாதபுரம், திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களை திறந்து வைக்கிறார்.
கோவை, வி.கே.கே.மேனன் சாலையிலுள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்ச்ர் அமித்ஷா கோவை வருவதை ஒட்டி, அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.