சென்னை; தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கான நிதி குறித்து மத்திய கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம் என காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழக அரசுக்குரிய கல்வி நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிப்ரவரி 15 அன்று வாரணாசியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதை கண்டித்த திமுக மறறும் கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், முன்னாள் மத்தியஅமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதமபரம், மத்திய கல்வி அமைச்சரின பேச்சு ஆணவத்தின் உச்சம் என கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம்.
அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது, அரசியல் சாசனம் உருவாகிய வரலாறும் தெரியாது என்பவற்றை அவருடயை ஆணவப் பேச்சு காட்டுகிறது.
மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம்
மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில அரசின் உண்மை இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படு கிறது என்பது அவருக்குத் தெரியுமா? இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் தந்த உறுதிமொழிகளையாவது அவருக்குத் தெரியுமா?
நாடாளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா? தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]