டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 5.36 மணியளவில் நில அதிர்வு. இதன் காரணமாக  கட்டடங்கள் குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு 4.2ஆக பதிவாகியுள்ளது.

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (17.02.2025) அதிகாலை 05:36 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளது எனத் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று இரவே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் கூறிய நிலையில், இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியமடைந்து வீடுகளில் இருந்து அலறியடித்துகொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் பதற்றம் அடையாமல் அமைதியாக இருக்கவும். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும். அதே சமயம் எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]