டெல்லி

மத்திய அரசு இதுவரை லோக்பால்  அமைப்புக்கு 2426 புகார்கள்  வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்காக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டு அது 2014 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி அமலுக்கு வந்தது.

மாநிலங்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்,

“லோக்பால் அமைப்புக்கு இதுவரை 2,426 புகார்கள் வந்துள்ளna.   இவற்றில் இந்த அண்டு  ஜனவர் 31 நிலவரப்படி, 2,350 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

“லோக்பால் சட்டத்தின் 3-வது பிரிவின்படி, தலைவர் தவிர, லோக்பாலில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 8-க்கு மிகாமல் இருக்க வேண்டும் . அவர்களில் 50 சதவீதம் பேர் நீதித்துறை உறுப்பினர்களாக இருக்க வேண்டும் .

தற்போது லோக்பால் அமைப்பில் தற்போது தலைவர் தவிர, 6 உறுப்பினர்கள் உள்ளனர், அந்த 6 பேரில் 3 பேர் நீதித்துறை உறுப்பினர்கள்”

என்றும் தெரிவித்துள்ளார்.