சென்னை: திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்டும் வகையில் இஸ்லாமிய அமைப்புகள், போஸ்டர் ஒட்டியுள்ளது மதுரை பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள், அமைப்புகள் இந்து முன்னணி கண்டனம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உடடினயாக சர்சைக்குரிய போஸ்டர் குறித்து நடவடிக்கை எடுத்து மக்களிடையே அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

திருப்பரங்குன்றம்  முருகன் கோயில் அமைந்துள்ள குமரன் மலையில், எவ்விதமான உயிர் பலியும்  செய்வது கிடையாது. அதுபோல   மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. இங்கும் அந்த பகுதியைச்சேர்ந்த இஸ்லாமியர்கள் சென்று தொழுகை நடத்தி வருகின்றன. ஆனால், 2025 ஜனவரி மாதம் சில இஸ்லாமிய அமைப்புகள்,   சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில்  சர்ச்சைக்குரிய வகையில் நோட்டீஸ் மற்றும் போஸ்டர் விநியோகம் செய்தது. அதில்,   ஜனவரி 18-ம் தேதி ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைக்குரிய நோட்டீஸ் வெளியிட்டவர்கள் அந்த பகுதிகளை சேர்ந்தவல்கள் இல்லை என்பதும் தெரிய வந்தது. ஆனால், இதை வைத்து திமுக எம்.பி. நவாஸ்கனி சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அவருடன் வந்தவர்கள், மலையில் உச்சிக்கு சென்று பிரியாணி சாப்பிட்டதும்  மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதை எதிர்த்துஇந்து அமைப்புகள் குரல் எழுப்ப, மாவட்ட ஆட்சியர் தடை விதிக்க இந்த விவகாரம் மதுரை உள்பட தென் மாவட்ட மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பின்னர் நீதிமன்றம் தலையிட்டு, ஆர்ப்பாட்டத்திற்கான இடத்தை மாற்றியது. இதையடுத்து சர்ச்சை சற்று ஓய்வு பெற்றது. அதே வேளையில் இந்த சர்ச்சையை உருவாக்கிய இஸ்லாமிய அமைப்புகள், மற்றும் ஆடுகோழிகளை கொண்டு வந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. சீமானிடம் வாய்க்கால் சண்டைக்கு போகும் காவல்துறை ஆணையர், இந்த விவகாரத்தில் மவுனம் சாதித்து வருவதும் ஆட்சியாளர்கள் மீதான சந்தேகங்களை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இஸ்லாமிய அமைப்புகள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளன. அதில்,  பிப்ரவரி 18ந்தேதி அன்று சிக்கந்தர் மலையில் ஆடு கோழி அறுத்து சமபந்த விருந்து வைக்கப்படும் என்றும், அதில் அனை வரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. இது அந்த பகுதி மக்களிடைய மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சர்ச்சையை உருவாக்கிய இந்த அமைப்புகள் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளது இந்து மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.இதன்மீது காவல்துறை இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக் கிறது. தமிழ்நாடு அரசின் இந்த செயல், மதுரையை கலவர பூமியாக மாற்ற நினைக்கிறதோ என்ற அச்சத்தை உருவாக்கி வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள், இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களையும், அதிருப்திகளையும் தெரிவித்து வருகின்றன.

இஸ்லாமிய அமைப்புகளின் இதுபோன்ற செயல்கள், தமிழ்நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும், இந்து இஸ்லாமிய மக்களிடைய விரோதத்தை வளர்க்கும் விதமாகவே உள்ளது. மேலும்,  இது முருகன் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்து வருகிறது. இதற்கு முன்பாக உயிர் பலியிடவோ, கந்தூரி அல்லது சமபந்தி விழாக்களை நடத்தவோ எவ்விதமான அனுமதியும் வழங்கப்படாத நிலையில், தற்போது திடீரென சில அமைப்புகள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தவிர்க்க பட வேண்டும்.
இதுதொடர்பாக  இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தை புனிதமாக கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து இந்துக்களும் வணங்கி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் முருகன் ஆலயமும், அதனுடன் உள்ள மலை மற்றும் வீதிகளும் திருப்பரங்குன்றம் முருகனுக்கே சொந்தம் என்றும், மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்கா ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது, இருந்தாலும் அதனை அகற்றாமல் மேற்கொண்டு எந்த கட்டுமானமும் கட்டக்கூடாது எனவும் லண்டன் பிரிவியூ கவுன்சில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது சில இஸ்லாமிய அமைப்புகள் மேற்படி சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி அறுத்து கந்தூரி கொடுக்கப் போவதாக திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்கும் விதத்தில் பிரச்சனை செய்து வருகின்றன. மேற்படி தர்காவில் ஆடு கோழி பலியிட்டு கந்தூரி கொடுத்ததற்கான எந்தவிதமான ஆவணமும் 1920 முதல் நடைபெற்று வந்த நீதிமன்ற வழக்குகளில் தாக்கல் செய்யப்படவில்லை. அதே போன்று வருவாய்த் துறையினரால் நடத்தப்பட்ட பல்வேறு அமைதி கூட்டங்களிலும் ஆடு, கோழி பலி கொடுத்து கந்தூரி கொடுக்கப்பட்டதாக எந்த ஆவணமும் இல்லை என்பதே உண்மையாகும்.

இதன் அடிப்படையிலேயே முன்னதாக மலையில் கந்தூரி கொடுக்கப்படும் என தர்கா நிர்வாகத்தால் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை வருவாய்த்துறையினர் அகற்றினர்.

மேலும் திருப்பரங்குன்றம் மலையில் கந்தூரி கொடுக்க முயற்சித்த இஸ்லாமிய அமைப்புகளை சார்ந்தவர்களுக்கு அனுமதி மறுத்து நீதிமன்ற உத்தரவு பெற்று வருமாறு வருவாய்த்துறை மற்றும் காவல் துறையால் வலியுறுத்தப்பட்டது.

மேற்குறிப்பிட்ட வகையில் மலைமீது பலி கொடுக்கும் எந்தவிதமான வழக்கமும் இல்லாத போது வலுக்கட்டாயமாக திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப் போவதாக மீண்டும் சில இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் செய்திகள் வெளி வந்துள்ளன.

மேலும் திமுக கூட்டணி கட்சிகள், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழி பலியிட்டு தந்தூரி விழா நடத்த ஆதரவாக செயல்படுவதுடன் இந்துக்கள் மீது அவதூறு பரப்பி அறிக்கைகள் வெளியிடுவது கண்டனத்துக்குரியது.

தற்போது அமைதியாக இருக்கும் திருப்பரங்குன்றத்தில் வேண்டுமென்றே எந்தவிதமான நடைமுறையும் இல்லாமல் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளதன் மூலம் திருப்பரங்குன்றத்தில் மீண்டும் ஒரு பதட்ட சூழலை உருவாக்கி மதக்கலவரத்தை ஏற்படுத்த திமுக கூட்டணி கட்சிகளும், ஜமாத் நிர்வாகமும் இணைந்து செயல்படுகிறதோ என்னும் ஐயம் எழுகின்றது.

மத நல்லிணக்கம் என்னும் பெயரில், வேற்று மதத்தினர் நடைமுறைகளை முருக பக்தர்களிடம் திணிப்பதை திமுக கூட்டணி கட்சிகள் கைவிட வேண்டும்.

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் வழிபாட்டுத்தலத்தை ஆக்கிரமித்து அதன் புனிதத்தை கெடுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு திமுக மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மதரீதியாக பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் உள்ளது. எனவே திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்காவினர் உயிரினங் களை பலியிடுவதற்கும், அதனை சமைத்து உணவு பரிமாறுவதற்கும் தடை விதித்து மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை பேண மதுரை மாநகர காவல்துறையினரும், தமிழ்நாடு அரசும் முறையான நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

இல்லையேல், அமைதிக்கு பெயர் பெற்ற ஆன்மிக பூமியான தமிழ்நாடு கலவர பூமியாக மாறி விடும்…. இதற்கு காரணம் திமுக அரசுதான் என்ற வரலாற்று பிழை வரலாற்றில் இடம்பெற்றுவிடும்….  எச்சரிக்கை

குலுங்கியது மதுரை: திருபரங்குன்றம் முருகன் மலையை பாதுகாக்க குவிந்த தென்மாவட்ட மக்கள்!