சென்னை: தமிழ்நாட்டில் வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில், சென்னை மக்களின் வசதிக்காக விரைவில் ஏசி பெட்டிகளைக்கொண்ட புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி முதல்கட்டமாக சென்னை தாம்பரம் இடையே  12 பெட்டிகளை கொண்ட ஏசி ரயில் இயக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அநேகமாக மார்ச் மாதம் இந்த புதிய ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே டில்லி மும்பை போன்ற இடங்களில் புறநகர் சேவைக்கு ஏசி ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையிலும் ஏசி ரயில் சேவையை கொண்டு வர பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு தெற்கு ரயில்வே சென்னையிலும் ஏசி புறநகர் ரயில் இயக்கப்படும் என அறிவித்தது. அதனப்டி, முதல்கட்டமாக சென்னை கடற்கரை முதல் செங்கல் பட்டு வரை இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இன்றுவரை அது செயல்பாட்டுக்கு வரவில்லை.

இநத் நிலையில், கடந்த ஆண்டு (2024)  கூறிய தெற்கு ரயில்வே,  வரும் 2025ம் ஆண்டு ஜனவரியில் ஏசிபெட்டிகள் பயன்பாட்டுக்கு வர இருப்பதாகவும், அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறியது. அதைத்தொடர்ந்து, அதற்கான  ‘குளுகுளு ஏசி ‘ மின்சார ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள்  ஐசிஎஃப்பில் நடைபெற்று வந்தது. தற்போது ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணி முடிவடைந்த நிலையில், விரைவில் சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இயக்கப்படும் 12 பெட்டிகளை கொண்ட  ஏசி   ரெயிலில் 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரெயிலில் 5,700 பேர் பயணம் செய்ய முடியும் என்று கூறியுள்ள அதிகாரிகள்,  முதல் கட்டமாக சென்னை கோட்டத்தில் 2 ‘குளுகுளு’ மின்சார ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணி முடிவடைந்துள்ளதால்,   விரைவில் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதையடுத்து சோதனை ஓட்டம் நடத்த ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த  சோதனை ஓட்டம் முடிவடைந்ததும் ரெயில் உடனடியாக இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்த ரெயில் சேவை  விரைவில் தொடங்கப்படும் என்றும், அவை  தொடங்கப்படும் போது கட்டண விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படும் என்றும ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

2025ஜனவரி முதல் சென்னை மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள்! ரயில்வே தகவல்