என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி நாயர்.
இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் என்பவரை நீண்டகாலமாக காதலித்து வந்த நிலையில் தற்போது அவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள பார்வதி நாயர், “என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க நான் ஆவலுடன் இருக்கிறேன். ஆஷ்ரித்தை ஒரு விருந்தில் தற்செயலாக சந்தித்தேன். நாங்கள் அன்று பேச ஆரம்பித்தோம். ஆனால் உண்மையாக நெருங்கி வர சில மாதங்கள் ஆனது. தற்போது இருவரும் காதலித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
இவர்களது திருமணம் மலையாள மற்றும் தெலுங்கு பாரம்பரியம் இரண்டையும் கலந்து பிப்ரவரி 6ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற இருக்கும் இந்த திருமணத்திற்கு பிறகான வரவேற்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் கேரளாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.