டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.

நடப்பாண்டின் முதல்கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) அன்று குடியரசு தலைவரின் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று பட்ஜெட் அமர்வு தொடங்கியது. இன்று 2வது நாள் அமர்வு காலை 11மணிக்கு வழக்கமான நடைமுறைகளுடன் தொடங்கியது. இதையடுத்து காலை 11.10 மணி அளவில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
நமது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக அளவில் உயர்ந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் தனது பட்ஜெட் உரையைத் தொடங்கினார் மகாகும்பே கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் பட்டியலை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
இதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அவையில் கோஷம் எழுப்பினர். அவர்களை சபாநாயகர் கண்டித்த நிலையில், அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.