தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மகள் தவ்தி ஜிவால் சினிமாவில் நுழைகிறார் இவர் ‘கராத்தே பாபு’ படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கும் கராத்தே பாபு படத்தில் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்தப் படத்தில் ரவி மோகன் கதாநாயகனாக நடிக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக தவ்தி ஜிவால் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிப்பு துறையில் நுழைந்திருக்கும் தவ்தி ஜிவால் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சதா உடன் இனைந்து தனது சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ரவி.

எம் குமரன், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், பேராண்மை, தனி ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் ‘ஜெயம்’ ரவி என்ற தனது முதல் படத்தின் அடையாளத்துடன் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருந்தார்.

இந்த நிலையில், தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றியிருப்பதாகவும் தன்னை ரவி மோகன் அல்லது ரவி என்று அழைக்குமாறு அவர் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.