டெல்லி
இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஆண்டின் முதல் தொடர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
நாளை 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வஇதைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இரு அவைகளிலும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த தீர்மானத்துக்கு பிரதமர் மோடி அளிக்கும் பதிலுரையுடன் அடுத்த மாதம்(பிப்ரவரி) 13-ந்தேதி பட்ஜெட் தொடரின் முதல் பகுதி நிறைவடைகிறது. பட்ஜெட் தொடரின் 2-வது பகுதி வருகிற மார்ச் மாதம் 10-ந்தேதி முதல் ஏப்ரல் 4-ந்தேதி வரை நடக்கிறது.
இன்று தொடங்கும் பட்ஜெட் தொடரில் பல்வேறு புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.