டெல்லி
பிரியங்கா காந்தி கும்பமேளாவில் பகதர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

தற்போது உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இiது கடந்த 14ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று அமாவாசை என்பதால் மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இல் 30 பேர் காயமடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் அனைவரும் பெண்கள் எனவு தகவல் வெளியாகியுள்ளது. விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதிவில்,
”உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடையட்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உடலை குடும்பத்தினரிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும். மேலும், இனி நடைபெறும் நீராடல் உள்ளிட்ட சடங்குகள் பாதுகாப்பாக நடைபெற மாநில அரசு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். பக்தர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் நீராட வேண்டும்.கங்கை அன்னை அனைவரையும் பாதுகாக்கட்டும்’
என்று தெரிவித்துள்ளார்.