ராமேஸ்வரத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீவு நகரமான ராமேஸ்வரத்தில் செயின் திருட்டு, பிக்பாக்கெட் உள்ளிட்ட பல்வேறு நூதன திருட்டு நடவடிக்கைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 24ம் தேதி அங்குள்ள அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள உடைமாற்றும் அறைக்கு பெண் ஒருவர் சென்றுள்ளார். அவருக்கு திடீரென சந்தேகம் ஏற்படவே, ஏதேனும் கேமரா உள்ளதா என சோதனை செய்துள்ளார்.
டைல்ஸ் கற்களுக்கு பின்புறம் ரகசிய கேமரா இருந்தது தெரிய வரவே, இது குறித்து அவர் போலீசில் புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடை மாற்றும் அறையில் இருந்து 3 கேமராக்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் என்ற இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தவிர, ராமேஸ்வரம் முழுவதும் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுள்ளார்.
[youtube-feed feed=1]