புதுக்கோட்டை:  கனிம வள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் ஜகபர் அலி   லாரி ஏற்றி கொடூரமாக  கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்த பகுதி காவல்ஆய்வாளர், தாசில்தார், விஏஓ பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஜகபர் அலி   கொலைக்கு காரணம் அரசு அதிகாரிகள்தான் குற்றம் சாட்டப்படும் நிலையில், அரசு அதிகாரிகள் அடுத்தடுத்து இடம் மாற்றம் செய்துள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கனிமவள கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொல்லப்பட்டதன் எதிராொலியாக, திருமயம் காவல் ஆய்வாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். தாசில்தார் மற்றும் விஏஓ பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் மற்றும் கனிமவள கொள்ளையர்களுக்கும் உள்ள நெருக்கத்தின் காரணமாகத்தான், ஜெகபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினரும், அந்த பகுதி மக்களும் கூறி வருகின்றனர்.

முன்னதாக,   புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அதிமுக நிர்வாகியுமான ஜகபர் அலி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக திருமயம் அருகே ஆர் ஆர் கிரசரில் முறைகேடாக கல்வெட்டி எடுக்கப்படுவதாக வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார்.

இறுதியாக ஜனவரி  13-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அப்போது, அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்  இனிமேல் மக்களை திரட்டித்தான் போராட்டம் நடத்த வேண்டும் என செய்தியாளர்களிடம் கூறினார்.

இநத் நிலையில்,  கடந்த 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனறு ஜெகபர் அலி திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியில் தொழுகை முடித்து வீடு திரும்பி வந்து கொண்டிருந்தபோது,  லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருமயம் காவல்துறையினர் கல்வாரி உரிமையாளர்களான ராசு, ராமையா உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை திருமயம் நீதிமன்றத்தில் ஆச்சர்யப்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு வரும் 3-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து புதுக்கோட்டை காவல் துறை பரிந்துரையின் பெயரில் இந்த வழக்கு விசாரணையானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் புவனேஸ்வரி நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி ஜென்னிஸ் இளங்கோ, ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட சிபிசிஐடி போலீசார் ஜகபர் அலி வீட்டில் தங்களது முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

இதனிடையே, திருமயத்தில் கனிமவள கொள்ளையை எதிர்த்து புகார் அளித்த ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேபோன்று, திருமயத்தில் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்த ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து திருமயம் தாசில்தார் புவியரசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாட்சியரின் பணியிட மாற்றத்தை தொடர்ந்து, கல்குவாரி அமைந்துள்ள துளையானூர் வட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் முருகராஜை, கந்தர்வகோட்டை தாலுகாவிற்கு பணியிட மாற்றம் செய்து, வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உத்தரவு பிரபித்துள்ளார்.

கனிம வளக்கொள்ளையை தடுத்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி படுகொலை! அரசு மீது அதிமுக, பாஜக குற்றச்சாட்டு