சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான மேலும் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் சொத்துக்களை சட்டவிரோத பண பரிமாற்றச் சட்டத்தின்படி முடக்கி உள்ளது.

கடந்த 2002-2006ம் ஆண்டைய அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். தற்போது திமுகவிலும் அமைச்சராக இருந்து வருகிறார்.
இவர் அதிமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. தொடர்ந்த, இந்த விசாரணை அமலாக்கத்துறை வசம் சென்றது. அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையைத் தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அ மைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமாக 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்கள் உள்பட மொத்தம் ரூ. 6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
மேலும் தொடர்ந்த விசாரணைகளை அடுத்து 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இதற்கிடையில் அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்கத்துறை மீது தொடர்ந்த வழக்க காரணமாக, அவர்மீதான நடவடிக்கைளில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே, அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தொடர கூடாது என்று கேட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுடள்ள பதிவில், “அமலாக்கத்துறையின் சென்னை மண்டல அலுவலகத்தின் மூலம் தூத்துக்குடி, மதுரை மற்றும் சென்னையில் அமைந்துள்ள ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களைச் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட விதிகளின்படி தமிழக மீன்வளத்துறை, மீனவர் நலன் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது”
என தெரிவித்துள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் 6.5 கோடி சொத்துகள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை…