சென்னை’

மிழிசை சவுந்தராராஜனை  செல்வப்பெருந்தகை  கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில்மாட்டுப் பொங்கலன்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி சென்னை  நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் மாடுகள் மூலம் ஒவ்வொருவரும் பெறும் பயன்கள் குறித்து விளக்கினார். மாட்டை வைத்து பூஜ்ஜியம் பட்ஜெட்டில் விவசாயம் செய்ய முடியும் என்றெல்லாம் பேசிய் அதே நேரத்தில் கோமியம் குறித்தும் பேசி இருந்தார்.

தற்போது வைராலாகும் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி பேசிய இந்த வீடியோ\ வுக்கு பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில்,

“மாட்டுக்கறியை சாப்பிடுகிறார்கள், மாட்டுச் சாணத்தை பயன்படுத்துகிறார்கள்; விஞ்ஞான பூர்வ அமிர்த நீரான கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என கூறுகிறார்கள். பசுவின் கோமியம் டாஸ்மாக்கைவிட மோசமானது இல்லை. 80 வகையான காய்ச்சலுக்கு கோமியம் மருந்தாக உள்ளது. கோமியத்தை அமிர்த நீர் என்றே குறிப்பிடுகிறார்கள்”

என்று கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில்,

“ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?

மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம்.

இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?. வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்.

என்று பதிவிட்டுள்ளார்,