சென்னை: ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, அதை, தேர்வர்கள் இணையதளம் சென்று அறிந்துகொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.

இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய OMR விடைத்தாளின் மாதிரியை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்த்து அறிந்து கொள்ளுமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 8ந்தேதி நடைபெற உள்ள குரூப்2ஏ தேர்வுக்கு இந்த புதிய மாதிரி தேர்வு விடைத்தாள்தான் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, ஓம்எம்ஆர் விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in இல் “OMR Answer Sheet Sample” என்ற தலைப்பின்கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து, புதிய மாற்றங்களை அறிந்துகொள்ளலாம்.
புதிய மாற்றத்தின்படி, வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்புநிற பேனாவினால் (ballpoint pen) நிரப்புவது தொடர்பாகவும், மேலும், பக்கம்-1ல் பகுதி-1ன்கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம்-2ல் பகுதி. 1ன் கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, தேர்வர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய OMR விடைத்தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்பொழுது, வரவிருக்கும் தேர்வுகளுக்கான (08.02.2025 FN அன்று நடைபெறவிருக்கும் குரூப்-IIA சேவைகள் உட்பட) OMR விடைத்தாளின் மாதிரி நகல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
New format TNPSC OMR Sheet_2025