கொல்கத்தா
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செயப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.கே. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 3வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் (வயது 31) அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனைய்யில் அந்த பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த விசாரணையில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் பயிற்சி பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை கொலை செய்தது தெரியவந்ததையடுத்து சஞ்சய் ராயை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிஐ விசாரணைஈள் பல்வேறு நபர்களிடமேற்கொண்ட விசாரணையின் ஸூஓஓசூஊ. சாட்சியங்களை அழிக்க முயன்றதாக ஆர்.கே.கர் மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கில் 50க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சீல்டா மாவட்டநீதிமன்ரத்துல் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து வாதங்களும் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அதன்பின்னர், தீர்ப்பிற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சீல்டா மாவட்டநீதிமன்றம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்து. குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் நாளை மறுதினம் (20ம் தேதி) அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.