சென்னை: பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை சந்திக்க பரந்தூர் செல்ல தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வரும் திங்கட்கிழமை விஜய் பரந்தூர் செல்கிறார்.

பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு அந்த பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 3 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், மக்களின் எதிர்ப்பை மீறி அங்கு விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருவதுடன், நிலங்களை கையகப்படுத்தும் பணியையும் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, அங்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், வெளியாட்கள் செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து, விஜய் வருகைக்காக பரந்தூர் போராட்டக் குழுவினருடன் தவெக பொதுச் செயலர் ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டார். அங்கு பொதுமக்களை சந்தித்து பேசும் வகையில், விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைகிறது. இந்த விமான நிலையத்துக்காக பரந்தூரை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் மட்டுமின்றி நீர் நிலைகள் என சுற்றுசூழலும் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. மேலும், அந்த பகுதியில், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த கிராமத்தை மையமாக வைத்து விமான நிலையத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு காவல்துறையினர் உதவியுடன் மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தி வருவதுடன், விமானம் நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இருக்கிறது.
இதையடுத்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 900 நாட்களை கடந்து நடந்து வரும் போராட்டத்தில் பரந்தூர் கிராமத்துக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வெளியாட்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இ
தனிடையே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் போராட்ட குழுவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள், மற்றும் போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், போராட்டம் நடத்தும் பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக கட்சியின் நிர்வாகிகள் அனுமதி கேட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன்படி, தவெக தலைவர் நடிகர் விஜய் ஜனவரி 20-ந்தேதி பரந்தூர் கிராம மக்களை நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டது.
இருப்பினும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதனால் விஜய் பரந்தூர் செல்வதில் சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், தற்போது காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
இதனிடையே, விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை விஜய் சந்திப்பதற்காக நடைபெற்று வந்த பணிகளை நேற்று (ஜனவரி 17) அன்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார். விஜய் வருகை தருவதையொட்டி, அங்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, விஜய், மக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
முன்னதாக ஜனவரி 14 பொங்கல் பண்டிகையன்று போராடும் மக்களை அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் அய்யநாதன், ஜெகதீஸ்வரன் ஆகியோர் சந்தித்தனர். விஜய் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து அவர்களுடன் விவாதித்தனர். இந்நிலையில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் போராட்டக் குழுவினரை ற சந்தித்துப் பேசினார். விமான நிலையம் அமைய உள்ள இடங்களை பார்வையிட்டார்.
ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே பொதுமக்களை விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடங்களில் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து விஜய் சந்திப்பு நிகழ்ச்சிகளான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.
தற்கொலை செய்வோம்: பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!
பரந்தூர் விமான நிலையம் விவகாரம்: கனிமொழி, ஜிஸ்கொயர் நிறுவனம்தான் காரணம் என சீமான் குற்றச்சாட்டு…
[youtube-feed feed=1]13கிராம மக்களின் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க சர்வதேச டெண்டரை கோரியது தமிழகஅரசு…