டெல்லி: நீட் தேர்வு எழுத உள்ள மாணாக்கர்கள், தங்களின் ஆதார் மற்றும் ஆபார் தரவுகளை பதிவேற்ற வேண்டும் என தேசிய தேர்வு முகமையான என்டிஏ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக உள்ளது. அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட்யுஜி தேர்வும்நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2025-ம் ஆண்டிற்கான நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு விரைவில் தொடக்க உள்ளது. இந்த நிலையில், மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வுகளின்போது ஏற்படும் முறைகேடுகளை தடுக்கும் வகையில், மத்திய கல்வித்துறையின் அறுவுறுத்தலின் படி, இந்தாண்டு முதல் தேர்விற்கான விண்ணப்ப பதிவில் APAAR ID மூலம் பதிவு செய்யும் முறை அமலுக்கு வருகிறது. மேலும், ஆதார் எண்ணை கொண்டு பதிவு செய்யவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். (APAAR ஐடி – ஒரு தனித்துவமான 12-இலக்கக் குறியீடு, (அதாவது One Nation One Student ID) மதிப்பெண் அட்டை, மதிப்பெண் தாள்கள், கிரேடுஷீட், டிகிரி, டிப்ளோமாக்கள், சான்றிதழ்கள் மற்றும் இணைப் பாடத்திட்ட சாதனைகள் உட்பட மாணவர்கள் தங்கள் கல்விக் கடன்களை டிஜிட்டல் முறையில் சேமிக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் அணுகவும் உதவும்.) தேர்வின்போது ஏற்படும், தவறுகளை தவிற்கும் விதமாகவும், விண்ணப்பப் பதிவை எளிதாகவும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், ஆதார் எண் கொண்டு விண்ணப்பத்தை பதிவு செய்ய மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மாணவர்களின் ஆதார் விவரத்தில் உள்ள பெயர் சரியாக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இடம்பெற்ற பெயர் மற்றும ஆதார் பெயர் ஒன்றாக இருக்க வேண்டும். பிறந்த தேதி – மாணவர்களின் பிறந்த தேதி ஆதாரில் சரியாக இருக்க வேண்டும். பயோமெட்ரிக் விவரங்கள் – தேர்வு மையத்தில் ஆதார் விவரங்களின் அடிப்படையில் தரவுகள் உறுதி செய்யப்படும்.
எனவே, தற்போதையை வரை ஆதாரில் பயோமெட்ரிக் அட்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மொபைல் எண் – ஆதார் எண்ணுடன் சரியாக மொபைல் எண் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டள்ளது.
அத்துடன் மாணவர்கள் APAAR எண் மூலம் விண்ணப்ப பதிவு செய்யவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். APAAR என்பதற்கு Automated Permanent Academic Account Registry அதாவது தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவு என்று அர்த்தம். இதன் மூலம் மாணவர்கள் பள்ளி முதல் கல்லூரியில் உயர்கல்வி வரை உள்ள மதிப்பெண்கள், சான்றிதழ்கள், சாதனைகள், முக்கியமாக கல்லூரி படிப்பில் பெறும் கிரெடிட் ஆகிய தரவுகள் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படும்
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், எப்படி ஆதார் அட்டை மூலம் தொலைப்பேசி எண்கள், குடும்ப அட்டை தரவுகள், பான் எண்கள், வங்கி தரவுகள் இணைக்கப்படுகிறதோ அதே போன்று மாணவர்களின் கல்வி தரவுகள் அனைத்தும் ஒரே அட்டை மூலம் டிஜிட்டல் முறையில் சேகரிப்பதே APAAR அட்டை ஆகும். இதில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு நிரந்திர 12 இலக்கு அபார் எண் வழங்கப்படும். அபார் எண் கொண்ட மாணவர்கள் அதனைக் கொண்டும் பதிவு செய்யலாம்.
நீட் தேர்வில் ஆதார் எண் முக்கியம் ஏன்?
விண்ணப்பப் பதிவு செய்யும்போது ஆதார் எண் கொண்டு செய்யும்போது, தவறுகளை ஏற்படுவதை குறைக்க முடியும்.
ஆதார் தொழில்நுப்டம் மூலம் மாணவர்களின் தரவுகள் விரைவாக சரிபார்க்க முடியும்.
தேர்வு மையத்தில், மாணவர்களின் விவரங்கள் Facial recognition மூலம் விரைவாகவும், தெளிவாகவும் சரிபார்க்க முடியும்.
மேலும், தேர்வுகளில் நடைபெறும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கவும் ஆதார் விவரங்கள் உதவியாக இருக்கும்.
2025-ம் ஆண்டிற்கான இளநிலை நீட் தேர்வு அறிவிப்பு டிசம்பர் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய நிலையில், விரைவில் விண்ணப் பதிவு மற்றும் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை இனி தேர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தும் என கூறப்பட்ட நிலையில், இந்தாண்டுக்கான நீட் தேர்வு பாடத்திட்டம் மட்டுமே தற்போது வரை வெளியாகியுள்ளது. நீட் தேர்வு தரவுகளை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
இளநிலை நீட் தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு 011-40759000 என்ற எண் அல்லது neetug2025@nta.ac.in என்ற இமெயில் முகவரியில் தொடர்புக் கொண்டு அறிந்துகொள்ளலாம்.