சென்னை: மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு காட்டப்படுகிறது , இதற்கு அமைச்சர் மூர்த்திதான் காரணம் என டைரக்டர் ரஞ்சின் அமைப்பான நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்த ஆண்டு அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டிகள் திமுக கட்சியின் போட்டியாக மாறி போனதாக அந்த பகுதி மக்கள் பலர் குற்றம் சாட்டி வரும் நிலையில், அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அந்த பகுதி மக்களின் மாடுகளையும், மாடுபிடி வீரர்களும் புறக்கணிக்கப்படுவதாக கூறி நேற்று (ஜனவரி 15) அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், இன்று (ஜனவரி 16) அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்தது. பின்னர் அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி இன்று சமூகமாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின்போது, அமைச்சர் மூர்த்தி ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக, பறையர் சமூக மக்கள் கடும் குற்றச்சாட்டுளை தெரிவித்தனர். அதிமுக அரசின் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியில் ஜாதி பாகுபாடு காட்டுவதாக கூறி பாலமேடு கிராமத்தில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடி கட்டி ஜல்லிக்கட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு, (2023) சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து கடந்த இரண்டு வருடங்கள் தங்கள் பறையர் சமூகத்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு பாலமேடு ஜல்லிக்கட்டில் மரியாதை செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் தங்கள் பறையர் சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் மரியாதையும் செய்யவில்லை. அவர்களின் கோவில் காளையை விடவும் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக அமைச்சரிடம் பலமுறை அப்பகுதி மக்கள் தெரிவித்தும், அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களின் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியிலும் சாதிய பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்திமீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஜாதிய பாகுபாடு அதிகம் பார்க்கும் திராவிட மாடல், சமூகநீதி காக்கும் அரசு என சொல்லிக்கும் அமைச்சர் மூர்த்தி மீது வழக்கு தொடுக்க உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். வரும் தேர்தலில் இந்த அமைச்சர் தொடர்புடைய திமுக கட்சிக்கு வாக்கு அளிக்கப் போவதில்லை என்றும் பலர் கொந்தளித்தனர்.
இதற்கிடையில், அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டு. தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன.
இந்த நிலையில், மதுரை ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு! இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும், திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை, களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள் இதற்கு முழு காரணம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன் ???
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.