மும்பை

புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியின் குடும்பத்துக்கு ரூ. 8 லட்சம் இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு மே 8 ஆம் தேதி மும்பை மாவட்டம் வடலா நகரில் இருந்து சின்சுபக்லி நகருக்கு சென்றுகொண்டிருந்த புறநகர் ரயிலில் நசீர் கான் என்ற இளைஞர் பயணித்தார். ரயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் படியில் நின்றுகொண்டிருந்த நசீர் கான் கீழே விழுந்து படுகாயமடைந்த நசீர் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கத்தும் சிகிச்சை பலனின்றி நசீர் கான் உயிரிழந்தார்.

நசீர் கானின் மரணத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரது பெற்றோர் ரெயில்வே உரிமைகோரல் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். நசீர் கான் செல்லுபடியாகும் (valid) டிக்கெட்டில் பயணிக்கவில்லை ந்ன்ஊ நசீர் கான் ரெயிலில் இருந்து விழுந்ததற்கான போதிய ஆதாரங்கள் இல்லை ஏணாஊ கூறி இழப்பீடு வழங்க ரயில்வே உரிமைகோரல் தீர்ப்பாயம் 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது.  இதை எதிர்த்து நசீர் கானின் பெற்றோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

நேற்று இந்த வழக்கில் வெளியான தீர்ப்பின்படி, ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த நசீர் கானின் பெற்றோருக்கு ரூ. 8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ரூ. 8 லட்சம் இழப்பீட்டை 8 வாரத்திற்குள்  7 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.