நிலாம்பூர்
கேரளவின் நிலாம்பூர் தொகுதி இடதுசாரி கூட்டணி எம் எல் ஏ அன்வர் திருணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
கேரளாவின் நிலாம்பூர் தொகுதியில் இடதுசாரி கூட்டணி எம்.எல்.ஏ.வாக உள்ள பி.வி. அன்வர் துவக்கத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் நட்புடன் இருந்தார். பிறகு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆளும் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொண்டார்.
எனவே ஆளும் அரசை விமர்சித்து பேசி வந்த நிலையில் அவர் தி.மு.க.,வில் இணைவார் எனவும் தகவல் வெளியாகின. ஆயினும் அது நடக்கவில்லை.
திடீரென அன்வர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். அன்வர், கடந்த 2016, 2021ம் ஆண்டு தேர்தல்களில் நிலாம்பூர் தொகுதியில் இடதுசாரி கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.