குணா

த்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அனைத்து மக்களவை தொகுதிகளில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

நேற்று மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்ச்ர் ஜோதிராதித்ய சிந்தியா திறந்து வைத்து உரையாற்றினார்.

ஜோதிராதிய சிந்தியா தனது உரையில்

“நாட்டில் கையால் கடிதங்கள் எழுதும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க நாம் முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அது இதயத்தின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. தபால் நிலையங்களின் சேவைகளில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் 6,000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க வேண்டும் என பிரமக்களவை தமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இதன்படி நாட்டின் 543 தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும். இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வெளியுறவு அமைச்சகம் மற்றும் அஞ்சல் துறை ஆகியவை உறுதிகொண்டுள்ளன.”

என்று தெரிவித்தார்.