திருச்சி: இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என சேலத்தை சேர்ந்த தமிழக  கிரிக்கெட் வீரர் நடராஜன்  நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் திருச்சியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் நான் நிறைய கேப்டன்களின் தலைமையில் விளையாடியுள்ளேன். குறிப்பாக கேப்டன்கள் கோலி, வில்லியம்சன் ஆகியோரை மிகவும் பிடிக்கும். தோனி தலைமையில் விளையாடியது இல்லை.

ஐபிஎல் போட்டிகளில் ஆடி வந்த சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சொந்த ஊர் சேலம் மாவட்டம். நடராஜனின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமம் ஆகும். இவரது தந்தை தங்கராஜ், தறித்தொழிலாளி. தாய் சாந்தா. அப்பகுதியில் இறைச்சிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் அணியில் இடம் பிடித்த சேலம் வீரர் நடராஜனின் திறமையை கண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த 2020ம் ஆண்டு  தேர்வு செய்யப் பட்டதுடன்,  அவர்  ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி-20 கிரிக்கெட் போட்டியில் முன்னணி பந்துவீச்சாளர் பும்ராவுடன், சேலம் நடராஜன் களம் இறங்கினார்.  ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பெயர் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில்  தற்போது,  அனைத்து கிராமப்புறங்களிலும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில்லை. இளைஞர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே தேர்ந்தெடுத்த துறையில் முன்னேற முடியும் என கூறியதுடன்,  தமிழ்நாட்டில் பிறந்த வீரர்கள் சி.எஸ்.கே அணியில் இடம்பிடிக்க வேண்டும் என நினைப்பார்கள். அதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.

நான் நிறைய கேப்டன்களின் தலைமையில் விளையாடியுள்ளேன். குறிப்பாக கேப்டன்கள் கோலி, வில்லியம்சன் ஆகியோரை மிகவும் பிடிக்கும். தோனி தலைமையில் விளையாடியது இல்லை.

சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர்,  விளையாட்டில் ஏற்றத் தாழ்வு இருப்பது சகஜம். தற்போது சில வீரர்கள் ஃபார்ம் அவுட்டில் உள்ளனர். அவர்கள் அடுத்தமுறை ரன் அடிக்கும் பொழுது அதை பெரிதாக பேசுவார்கள். சில போட்டிகளில் தோல்வியடைவது நம் கையில் இல்லை. இரண்டு தொடர்களில் தோல்வியடைந்ததை வைத்து நாம் எதுவும் கூற முடியாது என்றார்.

அஸ்வினின் இந்தி மொழி குறித்த கேள்விக்கு பதில் கூறியவர், பதில் தெரிக்க மறுத்ததுடன்,  இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பீர்களா என்ற கேள்விக்கு? கடந்த ஐபிஎல் தொடர் சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பேன். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.

மேலும், கிராமத்தில் இருந்து வந்த நான் இந்திய அணியில் தேர்வானதே பெரிய சாதனைதான். இனி வரும் காலங்களில் கிராமத்து இளைஞர்கள் நான் பட்ட கஷ்டத்தை படக்கூடாது என்பதற்காக எனது சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் அமைத்து கொடுத்துள்ளேன். நிறைய மாவட்டங்களில் இருந்து பல இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.