டெல்லி

பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு பிர்ஹமர் மோடி இரௌங்க தெரிவித்துள்ளார்.

 

நேற்று பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் காலமானார். இவர் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ஜெயச்சந்திரன் இந்திய தேசிய திரைப்பட விருதை ஒருமுறையும், தமிழக அரசின் மாநில திரைப்பட விருதை நான்கு முறையும், கேரள மாநில திரைப்பட விருதை நான்கு முறையும் பெற்றுள்ளார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இவர் தமிழில் புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், சம்சாரம் அது மின்சாரம், அம்மன் கோவில் கிழக்காலே, கிழக்குச் சீமையிலே, பூவே உனக்காக, சுந்தரா டிராவல்ஸ், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.

ஜெயச்சந்திரன் மறைவிற்கு பிரதமர் மோ,

”ஜெயச்சந்திரன் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பழம்பெரும் குரலால் ஆசீர்வதிக்கப்பட்டவர். பல்வேறு மொழிகளில் அவரது ஆத்மார்த்தமான பாடல்கள் வரும் தலைமுறையினரின் இதயங்களை தொடும். அவரது மறைவால் வேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன”

எனப் பதிவிட்டுள்ளார்.,