ஜய்கர்

த்திய பிரதேச மாநிலத்தில் நடந்து சென்றவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுஷில் குமார் சுக்லா. என்பர் மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள அஜய்கர் பகுதியை சேர்ந்தவர் ஆவார் இவர் தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்காக விருந்தினர்களை அழைப்பதற்கு இவர் சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அந்த வழியாக காவல்துறை வாகனத்தில் சென்ற காவல்துறியினர் அவரை தடுத்தி நிறுத்தி அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று சிறிது நேரம் காவலில் வைத்துவிட்டு, ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி ரூ.300 அபராதம் விதித்ததாகவும் கூறப்படுகிறது.

சுஷில்குமார் சுக்லா இதனால் மனமுடைந்துஇந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அஜய்கர் துணை பிரிவு காவல் அதிகாரி ராஜீவ் சிங் பதோரியா தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.