டெல்லி’
ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி முதல்வர் இல்லத்துக்குள் நுழைய முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சுமார் 150 நாட்கள் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர்பதவியை ராஜினாமா செய்த்தால்,புதிய முதல்வராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கெஜ்ரிவால் தனக்கு அரசு ஒதுக்கிய பங்களா வீட்டை காலி செய்து புதிய வீட்டிற்கு குடியேறினார். கெஜ்ரிவால் அரசு பங்களாவில் தங்கியிருந்தபோது பங்களாவை சீரமைப்பதற்காக ஆடம்பரமான விலை உயர்ந்த பொருட்கள் வாங்கப்பட்டதாகவும், இதற்கு பொதுப்பணித்துறை உரியக் கணக்கு வழங்கப்படவில்லை என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆம் ஆத்மி கட்சியினர் ஆய்வு செய்வார்கள் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. பங்களாவிற்குள் நுழைய காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
அதை மீறி இன்று காலை ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினர் பங்களாவிற்குள் நுழைய முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திதால் அமைச்சர் சவுரப் பரத்வாஜ், எம்.பி. சஞ்சய் சிங் இருவரும் பங்களாவுக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர்.